News Update :

Saturday, January 19, 2019

TamilLetter

சுயநலத்திற்காக சுமந்திரனை பாராட்டும் முன்னாள் முதலமைச்சர் ஹபீஸ் நஸீர் அகமட்





ஏ.எல்.நஸார

மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கது என முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நஸீர் அகமட் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தல்களை பழைய விகிதாசார முறைமையின் கீழ் நடாத்துவதற்கு பிரதான கட்சிகள் முன்வந்துள்ள நிலையில் இதற்கான சட்டத்தை நிறைவேற்றுவதற்கான முன் ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பின்புல அழுத்தத்தோடு இந்த சட்டமூலத்தை கொண்டு வரும் நடவடிக்கை அவசர அவசரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் நீண்ட மௌனத்தின் பின்னர் வடக்கு பிரதிநிதிகள் குறிப்பாக சுமந்திரன் மௌனம் கலைந்திருப்பது பாராட்டக்குறியது.
அத்தோடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் இவ் விடயத்தில் முழுமையான அழுத்தத்தை அரசுக்கு கொடுத்து வருகின்றது என்றார் முன்னாள் முதலமைச்சர்

இது இவ்வாறு இருக்கத்தக்க முன்னாள் முதலமைச்சர் நஸீர் அகமட் தான் அதிகாரத்திலிருந்து கொண்டே மாகாண சபையின் அதிகாரங்களை மத்திய அரசுக்கு தாரைவார்த்தார்.

இப்போது தனது அதிகாரம் பறிக்கப்பட்ட நிலையில் மாகாண சபையின் அதிகாரமும்; ஜனநாயகமும் பாதுகாக்கப்பட வேண்டுமென கருத்துரைப்பது நகைப்புக்குறியது என மக்கள் கூறுகின்றனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-