News Update :

Wednesday, January 16, 2019

TamilLetter

உதுமாலெப்பையின் கடைசி ஆயுதத்தையும் பறித்தாரா? முன்னாள் அமைச்சர் அதாஉல்லா

உதுமாலெப்பையின் கடைசி ஆயுதத்தையும் பறித்தாரா? முன்னாள் அமைச்சர் அதாஉல்லா



வஹாப்தீன்

தேசிய காங்கிரஸின் தலைவர் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவுக்கும் அவரது கட்சியின் முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பைக்குமிடையிலான நம்பகத்தன்மை நாளுக்குநாள் குறைந்து கொண்டே செல்வதாக தேசிய காங்கிரஸின் ஆதரவாளர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது.

முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை முஸ்லிம் காங்கிரஸ் அல்லது மக்கள் காங்கிரஸோடு இரகசியமான முறையில் நெருக்கமாக செயற்படுகின்றார் என்ற குற்றச்சாட்டுக்களையும் அவரது கட்சியின் முக்கிய பிரமுகர்கள் வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

இதை நிரூபிக்கும் வகையில் சில சம்பவங்ளும் நடந்தேறி வருகின்றது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் துணைத் தவிசாளராக உதுமாலெப்பையின் சகோதரர் எம்.எஸ்.ஜஃபர் இருந்து வருகின்றார்.

இவர் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 13வது கூட்ட அமர்வில் கலந்து கொண்டு இக் கூட்டம் நான் கலந்து கொள்ளும் கடைசிக் கூட்டமாக இருக்கலாம் என தெரிவித்திருந்ததோடு தலைவரின் ஆணைப்படி ஒலுவில் பிரதேசத்திற்கு எனது உறுப்பினர் பதவி சென்றடைய வேண்டுமென்பதற்காக இம் முடிவை தான் எடுக்க நேர்ந்தது எனும் கருத்துப்பட தெரிவித்தார்.

துணைத் தவிசாளர் சபையில் கூறியபடியே தனது பதவி விலகல் கடிதத்தை சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு அன்று மாலையே அனுப்பியுள்ளதாக அவரின் ஆதரவாளர்கள் எம்மிடம் தெரிவித்தனர்.

உதுமாலெப்பை இனி தம்மோடு இணையமாட்டார் எனவே எதற்காக நமது கட்சியின் பதவிகளை அவரைச் சார்ந்தோருக்கு வழங்க வேண்டுமென்ற கருத்து கட்சியின் தலைமையிடம் உள்ளதாகவும் இதனால்தான்  இப்பதவி மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அத்தோடு   ஒலுவில் பிரதேசத்திற்கு பிரதிநிதித்துவத்தை  வழங்குவதுதான் கட்சியின் எதிர்கால நடவடிக்கைக்கு உகந்தது என்றும் அங்கு கூறப்பட்டுள்ளது.

இந்த வகையில் உதுமாலெப்பையிடம் இருந்த கடைசி ஆயுதத்தையும் அதாஉல்லா பறித்தெடுத்தது உதுமாலெப்பையின் ஆதரவாளர்கள் மத்தியில் கொதி நிலையை ஏற்படுத்தியுள்ளது.


TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-