News Update :

Saturday, January 12, 2019

TamilLetter

சுகாதார அமைச்சின் இணைப்புச் செயலாளராக ஏ.எல்.தவம் நியமனம்

 சுகாதார அமைச்சின் இணைப்புச் செயலாளராக ஏ.எல்.தவம் நியமனம்

  ஏ.எல்.றமீஸ்




ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் விவகார வேலை வாய்ப்பு செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.தவம் சுகாதார இராஜாங்க அமைச்சின் இணைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கிமின் அறிவுறுத்தலுக்கமைய சுகாதார இராஜாங்க அமைச்சர் பைஸல் காசீம் இந் நியமனத்தை வழங்கியுள்ளார்.

கடந்த மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்ட ஏ.எல்.தவம் அக்கட்சியில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றதுடன் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற மாகாண சபை உறுப்பினர் என்ற பெருமையையும் தவம் பெற்றிருந்தார்.

முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு மத்தியில் சிறந்த ஆளுமையுள்ளவராக பார்க்கப்படும் தவம் தனது பல்கலைக்கழக காலத்தில் ஒலுவில் பிரகடணத்தின் மூலம் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-