News Update :

Thursday, January 10, 2019

TamilLetter

யார் எதிரி – தமிழ் உறவுகளே


குல்ஸான்




இன்று கிழக்கு மாகாணத்தின் பல்வேறு இடங்களில் தமிழ் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இனரீதியாக மோதிக் கொள்கின்றனர்.

தம் சமூகம் எதற்காக சுமார் 50 வருடங்களுக்கு மேலாக உரிமை சார் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது தொடர்பான தெளிவான கண்ணோட்டமின்மையால் பெரும்பான்மை சிங்கள சமூகம் செய்த அதே தவறை இன்னுமொறு சிறுபான்மை சமூகத்தின் மீது தமிழ் சமூகம் அடக்கி ஆள எத்தனிப்பது எவ்விதத்தில் நியாயமாகவுள்ளது என தமிழ் சமூகத்திடம் கேட்க வேண்டியுள்ளது.

தமிழர்களின் முதலாவது சாத்வீக போராட்டத்தில் எத்தனை முஸ்லிம்கள் உங்களுக்கு பக்கபலமாக இருந்தார்கள் என்பதை மறந்து விட்டிர்கள்.
அண்ணன் அமிர்தலிங்கம் பெற்றுத்தரவில்லை என்றால் தம்பி அஷ்ரப் பெற்றுத்தருவேன் என்று கூறியது இன்னும் வரலாறு சொல்லிக் கொண்டிருக்கின்றது.

போராட்டவடிவம் மாறிய காலத்தில் முதல் போராளியாக முன்நின்று தங்களோடு இணைந்து கொண்ட முஸ்லிம் இளைஞர்கள் ஏராளம்.
கெப்படன் றாபி,கெப்டன் பாறுக் என எத்தனை முஸ்லிம் வீரர்கள் உங்களது அரணாக செயற்பட்டார்கள்.

காலப்போக்கில் அவர்களையும் உங்களது துப்பாக்கி குறிபார்த்தது என்பது மறக்க முடியாத வரலாற்று துரோகமல்லவா?

வடக்கிலிருந்து ஒரு மணித்தியாலத்திற்குள் உங்களால் துரத்தப்பட்ட முஸ்லிம்கள் 29 வருடங்களாக இன்னும் அகதி வாழ்க்கையே நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை நீங்கள் அறியவில்லையா?

சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக நீண்டிய துப்பாக்கிகள் போரடிய நீங்கள் பள்ளிவாசலுக்குள்ளும்.வயல் வெளிகளிலும்,சந்தைகளிலும் நின்ற அப்பாவி முஸ்லிம்களின் நெஞ்சில் தானே பாய்ந்தது இது உங்கள் போராட்ட தர்மமாகுமா?

முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இவ்வளவு துரோகத்தனத்தை செய்த போதும் உங்களது உரிமை சார் விடங்களுக்கு எதிராக எந்த முஸ்லிம் மகனும் தடையாக இருந்ததில்லை என்பது முஸ்லிம் மக்களின் பெருந்தன்மை அல்லவா

வடக்கு கிழக்கு இணைப்பதற்கு முஸ்லிம் மக்களின் ஆதரவு தேவை எனக் கேட்கின்றீர்கள் முஸ்லிம் சமூகம் ஏன் ஆதரவு வழங்க வேண்டும் என்ற ஒரு சிறு நியாயமான காரணத்தைக் கூட உங்களால் கூற முடியுமா?
தங்களது சொந்த காணிகளுக்குள் சென்று வாழ்வாதாரத்தில் ஈடுபடும் ஏழை விவசாயிகளை காட்டுமிராண்டித்தனமாக தாக்கி அவர்களின் உயிர் உடமைகளுக்கு சேதம் விளைவிக்கின்றீர்களே இது மனித நாகரிகத்திற்கு உட்பட்டதா?

எந்தவொறு முஸ்லிமும் உங்களுக்கு சொந்தமான காணிகளுக்குள் அத்துமீறி உரிமை கோர வந்தால் இதற்கான சட்ட நடவடிக்கை ஏராளமாகவுள்ளது.
அப்படியிருந்தும் நீங்கள் காட்டுச் சட்டத்தை கையிலெடுத்திருப்பதற்கான காரணம் காணி முஸ்லிம்களுக்குறியது என்பதனால்தானே

எனவே முஸ்லிம்களை அடிமைப்படுத்த வேண்டுமென்பதற்காக கீழ்த்தரமான செயற்பாட்டில் ஈடுபட்டு தங்களைத்தாங்களே அழித்து விடாதீர்கள்.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் ஒற்றுமையுடன் இணைந்து பயணிப்பதால் மாத்திரமே இரண்டு சமூகங்கள் நிலையான அபிவிருத்தியையும் அமைதியான வாழ்க்கையையும் வாழ முடியும் என்பதையும் மறந்து விடாதீர்கள்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-