News Update :

Saturday, January 19, 2019

TamilLetter

7 வர்த்தக கடைகள் தீக்கிரை - அதி பயங்கர சம்பவம் -


7  வர்த்தக  கடைகள் தீக்கிரை - அதி பயங்கர சம்பவம் -
பஸ்லி அகமட்


 இன்று  ஏற்பட்ட தீ விபத்துச் சம்பவத்தில் பொலன்னறுவ, கதுருவெல நகர பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னாலுள்ள வர்த்தக கட்டிடத் தொகுதியில்  7 கடைகள் முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் ஆகியோர் இணைந்து தீயை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தீயிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையெனவும் கூறப்படுகின்றது.

இவ்விபத்துச் சம்பவத்தில் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லையெனவும், பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-