News Update :

Wednesday, January 30, 2019

TamilLetter

துப்பாக்கி 2 இல் கலக்க வரும் தளபதியின் மகன்!



ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள ‘துப்பாக்கி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் காதாநாயகனாக அறிமுகமாவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், ரஜினியின் படத்தை முடித்தவுடன் அடுத்ததாக ‘துப்பாக்கி 2’ படத்தினை இயக்கவுள்ளார்.
இந்தப் படத்தில் விஜய்க்கு பதிலாக அவரது மகன் சஞ்சய்யை ஹீரோவாக நடிக்க வைக்க ஒரு திட்டம் ஒன்று உள்ளதாக இயக்குனர் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவான முதல் படம் ‘துப்பாக்கி’. இந்தப் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்நிலையிலேயே அண்மைக்காலமாக ‘துப்பாக்கி 2’ படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-