News Update :

Wednesday, January 30, 2019

TamilLetter

10 மணிக்குப் பின் பயணங்களை தவிர்க்குமாறு சஜித்துக்கு ஜனாதிபதி ஆலோசனை!



இரவு 10 மணிக்குப் பிறகு பயணங்களை மேற்கொள்ளாத வகையில் கடமைகளை முன்னெடுக்குமாறு, அமைச்சர் சஜித் பிரேமதாஸவிடம் தான் வேண்டுகோள் விடுத்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு- தாமரைத் தடாகத்தில் நேற்று இரவு இடம்பெற்ற கலாபூஷண விருது விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நேற்றைய நிகழ்வில் கலாசார அலுவல்கள் அமைச்சரான சஜித் சுகயீனம் காரணமாக கலந்து கொள்ளவில்லை என்பதாலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தில் மிகவும் நேர்மையான, திறமை மிக்க, வேலைப்பளு நிறைந்த அமைச்சர் சஜித் பிரேமதாஸவே என்று தான் நம்புவதாகத் தெரிவித்த ஜனாதிபதி,

இந்நிக​ழ்வில் சஜித் கலந்து கொள்ளாவிட்டாலும் கலாசார அமைச்சு கிடைக்க வேண்டிய ஒருவருக்கே கிடைத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே அவர் விரைவில் நலம் பெற வேண்டுமென்றும் தான் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-