News Update :

Friday, October 6, 2017

TamilLetter

அதாஉல்லாவின் அரசியல் வாழ்வுக்கு முடிவு – மனம் திறந்தார் முன்னாள் தவிசாளர்



 இறக்காமம் நாஸீக் அகமட்
அக்கரைப்பற்றுக்குள் மாத்திரம் அரசியல் செய்தால் தான் தொடர்ந்து பதவியில் இருந்து விடலாம் என தப்புக் கணக்குப் போட்ட அதாஉல்லாவால் இனி ஒரு போதும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் யு.கே ஜெபீர் மௌலவி தெரிவித்தார்.

வருமானம் குறைந்த  குடும்பங்களுக்கு வாழ்வாதார பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே  அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கிழக்கு மாகாணத்தில் ஒரு முஸ்லிம் முதலமைச்சர் வரக் கூடாது என்று 2008ம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் உறுப்பினர்கள் அதிகமாக தெரிவு செய்யப்பட்டபோதும் தம் சமூகத்திற்கு  கிடைக்க வேண்டிய கிழக்கின் முதல்வர் பதவியை முஸ்லிம்களை கொன்று குவித்த விடுதலைப்புலியின் கிழக்கு தலைவரை முதலமைச்சாரக்குவதற்கு மஹிந்தவோடு இணைந்து சதி செய்தார்.இதன் மூலம் முதலமைச்சராக வரவேண்டிய ஹிஸ்புல்லா அதாஉல்லாவின் சதியால் தோல்வியடைந்தார்.

அப்படிப்பட்ட அதாஉல்லா இன்று சமூகம் தொடர்பாக கண்ணீர் வடிக்கின்றார்.அவரின் கண்ணீருக்கு பின்னால் என்ன ஒழிந்திருக்கின்றது என்பது நன்றாகவே மக்களுக்கு புரியும்.

அடுத்து நடைபெறவுள்ள தேர்தல்கள் தொகுதி ரீதியில் நடைபெறவுள்ளது. பல பிரதேசங்கள் ஒன்றிணைந்துதான் ஒரு தேர்தல் தொகுதியாக மாற்றம் பெரும். அப்படி தொகுதி ரீதியில் தேர்தல்கள் வரும் போது அதாஉல்லாவால் எந்த தொகுதியில் போட்டியிட்டு வெல்ல முடியும்.அக்கரைப்பற்றில் உச்சக்கட்டமாக எட்டாயிரம் வாக்குகளை மாத்திரம் பெறமுடியும். மற்ற பிரதேசங்களில்; ஆயிரத்துக்கும் குறைந்த வாக்குகளை தவம் கிடந்துதான் பெற வேண்டும்.

ஆகவே அதாஉல்லா எனும் நபர் இனி ஒரு போதும் எந்த தொகுதியிலும் மக்களால் தெரிவு செய்யப்பட முடியாத ஒரு கட்சியின் தலைவராக இருந்து விடப் போகிறார் என மேலும் தெரிவித்தார் முன்னாள் தவிசாளர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-