News Update :

Wednesday, October 11, 2017

TamilLetter

ஹஸனலி தரப்பு மயில் சின்னத்துடன் சங்கமம்?








ஹஸனலி தரப்பு மயில் சின்னத்துடன் சங்கமம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து தூய முஸ்லிம் காங்கிரஸ் எனும் பெயரில் வலம் வந்து கொண்டிருக்கும் ஹஸனலி தரப்பினர் எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரசோடு இணைந்து தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அரசியல் மட்டத்தில் பேசிக் கொள்கின்றனர்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலிலாவது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை தோற்கடிக்க வேண்டுமென்பதற்காகவே இக்கூட்டு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

தேசிய காங்கிரஸின் தலைவர் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அமைச்சர் ரிஷாட் பதியூதினை கடுiமான வார்த்தைப் பிரயோங்களால் விமர்சித்து வரும் இச் சூழ்நிலையில் இவ்விருவரையும் முஸ்லிம் கூட்டமைப்புக்குள் உள்வாங்குவதற்கான முயற்சியை ஹஸனலி தரப்பினர் மிக அர்ப்பணிப்புடன் நீண்ட காலமாக செய்து வந்துள்ளனர்.

அதன் அடிப்படையில் ஹஸனலி தரப்பினரால் கொள்கைத்திட்டம் ஒன்று வகுக்கப்பட்டு அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு எதிரான நிலைப்பாட்டிலுள்ள முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு அதன் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டன.

இச் சந்தர்ப்பத்தில் அமைச்சர் ரிஷாட் பதீயுதீன்,முன்னாள் அமைச்சர் அதாஉல்லா,ஹஸனலி தரப்பினர் நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகவும் பல விட்டுக் கொடுப்புடன் முஸ்லிம் கூட்டமைப்பை அமைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டாதாக தகவல் கசிந்துள்ளது.

இதன் பிரகாரம் வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அம்பாரை மாவட்டத்தின் சம்மாந்துறை,அட்டாளைச்சேனை,கல்முனை,பொத்துவில்,இறக்காமம் ஆகிய பிரதேசங்களில் ரிஷாட் பதீயுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்திலும் அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபை ஆகியவற்றில் தேசிய காங்கிரஸின் குதிரைச் சின்னத்திலும் முஸ்லிம் கூட்டமைப்பு போட்டியிடுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிக்கின்றன.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-