News Update :

Thursday, October 5, 2017

TamilLetter

வட கொரிய அணுவாயுதம்; அமெரிக்காவே காரணம்! -அதிபர் புடின் சாடினார்!



வடகொரியா தனது ஆயுதப் பலத்தைப் பெருக்குவதற்கு அமெரிக்காவே காரணம் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குற்றஞ்சாட்டியுள்ளனர். 
மாஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தங்கள் ராணுவ வலிமையைக் கொண்டு வட கொரியவை மிரட்டுபவர்களே, அந்நாட்டின் ஆயுதப் பலம் அதிகரிப்பதற்குக் காரணமாக இருந்தவர்கள் என்று சாடினார். 

மிரட்டல் அதிகரிக்க அதிகரிக்க, வட கொரிய தனது ஆயுதப் பலத்தைப் பெருக்கிக் கொண்டே செல்வதாகவும் அதிபர் புடின் தெரிவித்துள்ளனர். எனவே, அணுவாயுத பலம் உள்பட இராணுவப் பலத்தை வட கொரியா பெறுவதற்காக அமெரிக்கா போன்ற இத்தகைய நாடுகளே காரணம் என்றும் அவர் விமர்சித்தார்.

ரஷ்யாவில் 40 ஆயிரம் வட கொரியா மக்கள் பணி புரிந்து வருவதாகக் கூறிய புடின், அவர்கள் ரஷ்யாவின் நண்பர்கள் என்றும் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் வட கொரியா எல்லையில் வழக்கத்துக்கு மாறாக இராணுவத்தை குவித்ததுடன் ரோந்துப் பணிகளிலும் ரஷ்ய துருப்புகள் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-