News Update :

Wednesday, October 4, 2017

TamilLetter

ஒசாமா பின் லேடனின் மகனுக்கு குறிவைக்கிறது பிரிட்டன் உளவுப் படை!



பிரிட்டன் மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதலை முன்னெடுக்கவிருக்கும் ஒசாமா பின் லேடனின் மகனை குறிவைத்து பிரிட்டனின் உளவு பிரிவு செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.

ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்கும் வகையில் அவரது மகன் ஹம்சா பின் லேடன் (வயது 28) பிரிட்டன் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து ஹம்சா பின் லேடனை தீர்த்துக் கட்டுவது அல்லது உயிருடன் சிறைப் பிடிப்பது என்ற அடிப்படையில் பிரிட்டிஷ் உளவுத்துறை சிறப்பு அதிரடிப் பிரிவை அமைத்திருப்பதாக கூறப்படுகிறது. 

வெகுகாலமாக பதுங்கி இருந்து தற்போது வெளிப்பட்டிருக்கும் ஹம்சா, தமது தந்தையின் கொலைக்குப் பழிதீர்க்க வேண்டும் எனப் பேசி வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அல் கெய்டா அமைப்பின் தலைவராகவும்  பொறுப்பேற்றுள்ள ஹம்சா பின் லேடன் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக பயங்கரவாதத் திட்டங்களை முன்னெடுக்க இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. 

தற்போது ஹம்சா பின் லேடன் சிரியாவில் பதுங்கியிருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலை, அடுத்து 40 உளவுப் பிரிவு சிறப்பு அதிரடிப் படையினர் அமெரிக்க குழுவினருடன் இணைந்து, தேடும் வேட்டையில் இறங்கியுள்ளனர். 

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-