News Update :

Thursday, October 12, 2017

TamilLetter

மஹிந்தானந்த, குமார வெல்கம அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கம் -



நாவலபிட்டி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர் மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் மதுகம ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சயின் தொகுதி அமைப்பாளர் குமார வெல்கம ஆகியோர் அமைப்பாளர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, மதுகம தொகுதியின் புதிய அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் சுமித்ரா பிரியங்கனி அபேடீரவும் நாவலபிட்டி புதிய தொகுதி அமைப்பாளராக மத்திய மாகாண சபை உறுப்பினர் எச்.ஏ. ரணசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இப்புதிய தொகுதி அமைப்பாளர்கள் நேற்றிரவு (12) ஜனாதிபதியும் கட்சித் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுள்ளனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-