News Update :

Sunday, October 8, 2017

TamilLetter

சவுதி அரேபியா மன்னர் மாளிகையில் நடந்த விபரீதம்








சவுதி அரேபியாவில் ஜெட்டா நகரில் அரண்மனை உள்ளது. இங்கு மன்னர் சல்மான் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கியுள்ளனர். அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று பாதுகாப்பையும் மீறி மர்ம வாலிபர் ஒருவர் அரண்மனைக்குள் புகுந்தான். அதைப் பார்த்த பாதுகாவலர்கள் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு அவனும் சுட்டான்.

இதனால் 2 தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதற்கிடையே மர்ம வாலிபர் சுட்டதில் பாதுகாவலர்கள் 2 பேர் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர்.

முடிவில் அரண்மனைக்குள் புகுந்த மர்ம வாலிபரும் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனிடம் இருந்து 3 வெடி குண்டுகள் மற்றும் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.
கொலையாளிக்கு 28 வயது இருக்கும். இவன் சவுதி அரேபியாவை சேர்ந்தவன். சவுதி ராணுவத்தில் பணி புரிந்தவன் என விசாரணையில் தெரிய வந்தது. எதற்காக அரண்மனையில் புகுந்து துப்பாக்கியால் சுட்டான் என தெரியவில்லை.

சவுதி அரேபியாவில் 2014-ம் ஆண்டில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஷியா பிரிவினர் மீதும், ராணுவத்தினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இத்தாக்குதலையும் அவர்கள் தூண்டுதலின் பேரில் நடத்தியிருக்க வேண்டும் என சவுதி அரேபியா அரசு கருதுகிறது.
முன்னதாக தலைநகர் ரியாத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் 3 மறைவிடங்களில் போலீசார் தாக்குதல் நடத்தினார்கள். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
சவுதி அரேபியாவில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால் அங்கு அமெரிக்கர்கள் பாதுகாப்பான முறையில் நடமாடும் படி தன்நாட்டு மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-