News Update :

Friday, October 6, 2017

TamilLetter

றஊப் ஹக்கீமின் புதிய வரலாற்றுப் பதிவு - ஏ.எல்.தவம்



இலங்கையின் அரசியல் வரலாற்றில் எந்த ஒரு எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் பரிந்துரைகளும் இதுவரையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் வர்த்தமானி அறிவித்தல் செய்யப்படவில்லை.
முதன் முதலாக, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றஊப் ஹக்கீமின் முயற்சியால் மாகாண சபைகளின் தொகுதிகள் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மாத்திரமே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

முஸ்லிம்களும் - மலையக மக்களுக்குமே எல்லை நிர்ணய விடயத்தில் சவால்களை முகம்கொடுத்து நிற்கின்றனர்
என்ற ரீதியில்,பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்காமல் தொகுதி எல்லைகள் வர்த்தமானி அறிவித்தல் செய்யப்படக்கூடாது என்பதை முன்வைத்து ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை கொடுத்து முன்னெடுத்த போராட்டத்தில் இவ்வெற்றி கிட்டியுள்ளது.

முஸ்லிம்களின் நலன்கள் எல்லை நிர்ணயத்தில் பாதிக்கப்படுமாயின் அவற்றைத் திருத்திக் கொள்ள இதனூடாக சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.
மகிந்த காலத்தைப் போன்றல்லாமல் நமது விவகாரத்தில் இது ஒரு பாதுகாப்பு ஏற்பாடாக அமைகிறது.

60:40 என்ற விகிதத்தை 50:50 ஆக மாற்றியத்தோடு எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் பரிந்துரைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகாரம் எறப்பட வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது ஒரு வரலாற்று திருப்பம்.

ஆசிய நாடுகளில் இதுவரையில் இவ்வாறு எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் பரிந்துரைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதில்லை. இலங்கையில் இடம்பெறவுள்ள இவ்விடயமே முதன்மையானதாகும்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீதும் அதன் தலைவர் றஊப் ஹக்கீமின் மீதும் எடுத்ததெற்கெல்லாம் குற்றம் கூறும் அரசியல் குறுடர்கள் ஏன் இவை பற்றிப் பார்ப்பதில்லை.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-