News Update :

Saturday, October 7, 2017

TamilLetter

பிரதமரை வேலைநீக்கம் செய்ய பிரதமரிடமே கடிதம் தந்த' நடிகர்!



பிரிட்டிஷ் பிரதமரை வேலையில் இருந்து நீக்க வேண்டும் என்று  பிரதமிடமே பரிந்துரை கடிதம் கொடுத்த நகைச்சுவை நடிகர் ஒருவரின் செயல் கடும் சலசலப்பை ஏற்படுத்தியது. 

பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே, தனது கட்சியின் வருடாந்திரக் கூட்டத்தில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு பலரும் கூடியிருந்த வேளையில் லீ நெல்சன் என்ற நகைச்சுவை நடிகர், தெரசா மேயிடம் கடிதம் ஒன்றை கொடுத்தார். 

அந்தக் கடிதம், பிரிட்டனில் வேலையில் இருந்து ஒருவரை நீக்குவதற்கு பரிந்துரை செய்வதற்கான 'பி-45' என்ற கடிதமாகும். அதில், பிரிட்டன் பிரதமர் தெரசா மேயை வேலையிலிருத்து நீக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

ஆனால், கடிதத்தை வாங்கிய தெரசா மே, அதை கீழே வைத்துவிட்டு உரையை தொடர்ந்தார். அப்பொழுது, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் விவகாரத்தில் தெரெசா மேயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜோன்சன்,  இந்தக் கடிதத்தைப் பிரதமரிடம் கொடுக்கச் சொன்னதாக லீ நெல்சன் கூறியதால் சிறிது நேரம் சலசலப்பு  ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-