News Update :

Tuesday, October 3, 2017

TamilLetter

ரோஹிங்கிய முஸ்லிம்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள முடிவு!!



ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான உயர்ஸ்தானிகரம் மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியவற்றுக்கு இடையில் செய்துக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்கீழ் மியன்மார் ஏதிலிகள் விரைவில் மூன்றாம் நாடு ஒன்றுக்கு அனுப்பப்படவுள்ளனர்.

இலங்கை அரசாங்கம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர், இலங்கையை பொறுத்தவரை,  1951ஆம் ஆண்டு ஏதிலிகள் உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை.

எனவே, குறித்த உடன்படிக்கையின்கீழ் இலங்கையால் உடன்படிக்கையின் எந்தப்பொறுப்பையும் ஏற்கமுடியாது.

எனினும் சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் மனிதாபிமான அடிப்படையில் இந்தப்பிரச்சினையை அணுக வேண்டியுள்ளது.

2008,2012 மற்றும் 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு வந்த ஏதிலிகள், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு இடையிலான நிரந்தர குடியுரிமை போன்ற அடிப்படையில் ஐக்கிய நாடுகளின் அதிகளுக்கான பேரவையின் தலையீட்டில் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் குறித்த நாடுகளும் ஏதிலிகளுக்கு வதிவிடங்களை வழங்க முன்வந்தன.

இதேவேளை அண்மையில் மியன்மாரில் இருந்து இலங்கைக்கு வந்த ஏதிலிகள், நேரடியாக இலங்கைக்கு வரவில்லை.

தென்னிந்தியாவில் இருந்து தப்பிச்செல்லும் வழியில் இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசிக்கும்போதே அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இதன்பின்னர் அவர்கள் ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான உயர்ஸ்தானிகரத்திடம் கையளிக்கப்பட்டனர்.

அவர்கள் ஐக்கிய நாடுகள் நிறுவனத்திடம் கையளிக்கப்பட்ட பின்னர், இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகள் நிறுவனத்துடன் உடன்படிக்கையை செய்துக்கொள்ளவில்லை.

எனவே குறித்த ஏதிலிகளுக்கான முழு உதவிகளையும் ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான உயர்ஸ்தானிகரகமே செய்துவருகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கடந்த ஒகஸ்ட் 31ஆம் திகதிவரை இலங்கைக்கு 728 ஏதிலிகள் வந்துள்ளனர்.

இதில் ஆப்கானிஸ்தானில் இருந்து 113 ஏதிலிகளும் ஈரானில் இருந்து 7பேரும், மாலைத்தீவில் இருந்து 8பேரும், மியன்மாரில் இருந்து 35பேரும், பாகிஸ்தானில் இருந்து 433பேரும் பாலஸ்தீனத்தில் இருந்து 10பேரும் சோமாலியாவில் இருந்து ஒருவரும் சிரியாவில் இருந்து 14பேரும் யேமனில் இருந்து 6பேரும் அடங்குகின்றனர்.

இந்தநிலையில் குறித்த ஏதிலிகளை மூன்றாம் நாடு ஒன்றுக்கு அனுப்பும் பொறுப்பை ஐக்கிய நாடுகளின் ஏதிலிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் ஏற்றுள்ளது என்றும் அமைச்சர் சமரசிங்க தெரிவித்தார்.

இலங்கைக்கு வந்த ஏதிலிகளின் உண்மைநிலையை சமூக மக்கள் அறிவார்களானால், அவர்கள் தீவிரவாதிகளை போன்று செயற்பட்டிருக்கமாட்டார்கள் என்றும் அமைச்சர் சமரசிங்க குறிப்பிட்டார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-