News Update :

Monday, October 2, 2017

TamilLetter

ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் : எதற்காக செய்யப்பட்டது? : வெளிப்படுத்திய பொலிஸார்





ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான மனிதாபிமான முகவரகத்தின் பாதுகாப்பின் கீழ் , மூன்று மாடி வீடொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த மியன்மாரில் இருந்து வந்த ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வண்ணம் நடந்துகொண்ட சம்பவமானது திட்டமிட்ட அமைதியை சீர் குலைக்கும் ஒரு சம்பவமாகும்.

சர்வதேச ரீதியில் நாட்டுக்கு அவப் பெயரைக் கொண்டு வரும் இத்தகைய சீர்குலைவுகளுக்கு இடமளிக்கப் போவதில்லை. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் பலர் கைது செய்யப்படவேண்டிய பட்டியலில் உள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேசாளர் பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ருவன் குனசேகர தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பொலிஸ் பேச்சாளர் ருவன் குனசேகர தெரிவித்ததாவது,

அகதிகள் மீதான அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் மிகவும் திட்டமிட்டு செய்யப்பட்ட சதியாகும்.
இதன் மூலம் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதோடு நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்துவதே நோக்கமாக இருந்துள்ளது.

இந்த விடயத்தில் இன்னும் எத்தனை பேர் கைது செய்யப்படுவர் என துல்லியமாக கூற முடியாது. எனினும் இன்னும் பலர் கைது செய்யப்படுவர்.
அவர்களில் தேரர்களும் உள்ளடங்குகின்றனர். அவர்களை கண்டிப்பாக கைது செய்வோம்.

அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதன் பின்னர் இந்த சதி நடவடிக்கையின் பின்னணி நோக்கம் குறித்து துல்லியமாக வெளிபப்டுத்த முடியும்.
தற்போதைக்கு பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ள பல்வேறு தகவல்கள் மற்றும் சான்றுகளை மையப்படுத்தி விசாரணை தொடர்கிறது என்றார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-