News Update :

Monday, October 9, 2017

TamilLetter

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கிமால் மாத்திரமே இப்படி செய்ய முடியும் - இறக்காம் பிரதேச மக்கள்






அகமட் ஆரீப்  (இறக்காம் செய்தியாளர்
நகர திட்டமிடல் அமைச்சின் சுமார் 30 கோடி ரூபா நிதியொதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட வேலைத் திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்படுவதுடன் மேலும் புதிய திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இறக்காமத்தில் எதிர்வரும் சனிக்கிழமை (14) நடைபெறவுள்ள இப் பிரமாண்ட நிகழ்வுக்கு நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்வதோடு அன்றைய தினம் இறக்காமம் பிரதான வீதி கபெட் வீதியாக அபிவிருத்தி செய்வதற்கான வேலைத் திட்டத்தையும் ஆரம்பித்து வைப்பார்.

இந் நிகழ்வு தொடர்பாக கருத்து தெரிவித்த இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் இறக்காம் பிரதேசத்திற்கு என்றுமே இல்லாதவாறு இவ்வளவு பாரிய நிதியை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமால் மாத்திரமே வழங்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.

எனவே தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு இறக்காமம் மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-