News Update :

Thursday, October 5, 2017

TamilLetter

ஆர்ப்பாட்டம் நடாத்த நீதிமன்றம் தடை : நடைபெறும் என்கிறார் நாமல்




நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் டி.வி. சானக்க ஆகியோருக்கு ஹம்பாந்தோட்டை நீதிமன்ற அதிகார எல்லைக்குள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள போதும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெறும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை நீதிமன்ற அதிகார எல்லைக்குள் வீதிப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் செய்தல், இந்தியத் துணைத் தூதரகம், மாகம்புர துறைமுகம் உள்ளிட்ட இடங்களில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளுதல், பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தும் வகையில் செயற்படுதல் ஆகிய செயற்பாடுகளுக்கு ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று தடை விதித்தது.

மத்தள விமான நிலையம், மாகம்புர துறைமுகம் ஆகியவற்றை அரசாங்கம் வெளிநாடுகளுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள தீர்மானித்திருந்தனர்.
இந்த நிலையிலேயே கூட்டு எதிரணியினால் முன்னெடுக்கப்படவிருந்த ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த நாமல்,

நாம் நீதிமன்றின் உத்தரவை மதிக்கின்றோம். எனினும் திட்டமிட்ட வகையில் யாருக்கும் பாதகம் ஏற்படாது அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-