News Update :

Sunday, October 8, 2017

TamilLetter

'வடக்கு – கிழக்கு இணைப்பு என்ற போலிப் பிரச்சாரம்; அதிகாரக் காய்ச்சலுக்கு மருந்து'
எப்போதெல்லாம் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு காத்திரமான தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறதோ – அப்போதெல்லாம் அம்முயற்சிகளைக் குழப்புவதற்கான சர்ச்சைக்குரிய விடயமாகத் தூக்கிப் பிடிக்கப்படுவது வடக்கு – கிழக்கு இணைப்பு என்ற விடயமாகும். தற்போதும் சாத்தியமே இல்லாத இவ்விடயம் அரசியல் லாபத்திற்காகத் தூக்கிப் பிடிக்கப்படுவதை நாம் அவதானிக்கலாம்.

இதற்கு முன்னர் 2002 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சமாதான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் இவ்வாறு வடக்கு – கிழக்கு இணைப்பு என்ற விடயமே தூக்கிப் பிடிக்கப்பட்டது. அன்று அவ்விடயத்தை பிராந்திய வல்லரசின் ஏஜெண்டுகளாக இரண்டு பேர் தூக்கிப்பிடித்தார்கள். அதில் மட்டக்களப்பு தமிழ் அரசியல்வாதி ஒருவரும் - அக்கரைப்பற்று முஸ்லிம் அரசியல்வாதி ஒருவரும் அடங்குவர். அதற்காக அவர்களுக்கு வழங்கப்பட வேண்டியவை 'பெட்டி பெட்டியாக' வழங்கப்பட்ட கதைகள் கண்ணூடாகக் கண்ட சாட்சிகளுடாக இன்று வரைக் கூறப்பட்டு வருகின்றன.

ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தைச் சீனாவிற்கு வழங்கிய விடயத்தில் உக்கிர கோபத்தில் இருக்கும் பிராந்திய வல்லரசுஇ இலங்கையின் அரசியலைக் குழப்பிஇ தீர்வு முயற்சிகளில் தடைகளை ஏற்படுத்திஇ அரசின் ஸ்தீரத்தன்மையை இல்லாமல் செய்யக் களமிறங்கியுள்ளது. அதில் தனது கடந்தகால எதிரி மகிந்த ராஜபக்சவை – எதிரியின் எதிரி நண்பன் என்ற வகையில் - ஒரு இயங்கு களச்செயற்பாட்டாளராகக் கூட்டுச் சேர்த்துள்ளது.

மகிந்தவுக்கும் அரசாங்கத்தைக் குழப்பி மீண்டும் ஆட்சி அதிகாரத்தைத் தம் வசப்படுத்திக்கொள்ளும் நிகழ்ச்சி நிரல் இருப்பதால் – இவ்வொன்றிணைவு இலகுவாக ஏற்பட்டுள்ளது. இவ்வழியூடாகதான்இ மகிந்தவாதியான அக்கரைப்பற்று அரசியல்வாதிக்கு மீண்டும் அதே வடக்கு – கிழக்கு இணைப்பு என்ற – மக்களை ஏமாற்றும் - கொந்தராத்துக் கொடுக்கப்பட்டு களமிறக்கி விடப்பட்டுள்ளது. மகிந்தவாதியான அக்கரைப்பற்று அரசியல்வாதிக்கு மீண்டும் தான் இழந்து நிற்கும் அதிகாரத்தை எப்படியாவது பெறவேண்டும் என்ற காய்ச்சல் இருப்பதால் – கிடைப்பதைப் பெற்றுக்கொண்டு – கிளம்பி இருக்கிறார்.

வடக்கும் – கிழக்கும் இணைக்கப்பட்டு - இதற்குப் பிறகு ஒரே மாகாணமாக - நிரந்தரமாக அமைய வேண்டுமாயின்இ அதற்கு - பாராளுமன்றத்தின் 2ஃ3 பெரும்பான்மை ஆதரவைப் பெறுவதோடு – சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த வேண்டிய தேவையும் – சட்ட ரீதியிலாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான இணைப்புக்கு ஆதரவு வழங்கினால் - நாட்டைப் பிரிக்க உதவிய துரோகிகளாகத் தாம் சித்தரிக்கப்படுவோம் என்ற அச்சத்தில் - அரசாங்கத்திலுள்ள சிங்கள எம்.பீக்கள் யாரும் ஆதரவு வழங்க மாட்டார்கள். அதுமாத்திரமன்றிஇ சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்கின்ற நிலையில் – இவ்விணைப்பு என்கின்ற விடயம் படுதோல்வி அடைந்துவிடும்.

இந்நிலையில்இ இதிலுள்ள சுவாரசியம் என்னவெனில் வடக்கு – கிழக்கு இணைப்பைப் பற்றிப் பேசும் மகிந்தவாதியான அக்கரைப்பற்று அரசியல்வாதிக்குஇ வடக்கு – கிழக்கு இணைப்பு என்ற விடயம் கனவிலும் சாத்தியப்படாது என்பது மிகத்தெளிவாகத் தெரியும்.

அவ்வாறு தெரிந்திருந்தும்இ அதிகாரக் காய்ச்சலுக்கு மருந்தாகவும் – பெட்டிகளின் கனதிக்காகவும் – மக்களைக் குழப்பவும் – மகிந்த விசுவாசத்தைக் காட்டவும் களமிறங்கி - நாக்கூசாமல் பொய்யுரைக்கிறார். போலிப் பிரச்சாரம் செய்கிறார். மக்களை மாக்களாக்க முனைகிறார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-