News Update :

Sunday, October 8, 2017

TamilLetter

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எதிராக சதியா?





அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக புதிதாக கடமையேற்றுள்ள ஏ.எம்.அகமட் அவர்களுக்கு எதிராக மறைமுகமாக பல சதித்திட்டங்கள் அரங்கேற்றப்படுவதாக தகவல் கசிந்துள்ளது.

வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அகமட் அக்கரைப்பற்றை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு பிரதேசவாதத்தை சூட்டி அவரை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென்பதே அவர்களின் பிரதான இலக்காகும்.

இத் திட்டத்தை அட்டாளைச்சேனையின் கல்வி அதிகாரி ஒருவர் முன்னிற்று ஏற்பாடு செய்து வருவதாக அதே பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மிகவும் மன வேதனையுடன் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

குறிப்பிட்ட அந்த அதிகாரி அட்டாளைச்சேனை கோட்டத்திலுள்ள பாடசாலை அதிபர்களோடு முதற்கட்டமாக கலந்துரையாடி வருவதாகவும் மிக விரைவில் கல்விப் பணிப்பாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தவுள்ளதாகவும்; கூறப்படுகின்றது.  

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-