News Update :

Friday, October 13, 2017

TamilLetter

யுனேஸ்கோவை விட்டு வெளியேறுவோம்! அமெரிக்கா-இஸ்ரேல் அறிவிப்பு!




யுனெஸ்கோவில் இருந்து வெளியேறப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து இஸ்ரேலும் வெளியேற உள்ளாக கூறியுள்ளது.

ஐ.நா.வின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ, இஸ்ரேலுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக அமெரிக்கா தொடர்ந்து கூறி வந்தது. யுனெஸ்கோ செயல்பாடுகளில் இருந்து விலகியே இருந்தது. இதனால் அமெரிக்கா எந்த நேரத்திலும் யுனெஸ்கோவில் இருந்து விலகலாம் என்று தகவல் வெளியானது.  

இந்நிலையில் யுனேஸ்கோவில் இருந்து விலகப்போவதாக aஅதிபர்டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த விலகல் டிசம்பர் 2018 இறுதியில் நடைமுறைக்கு வரும் என்றும், அதுவரை யுனேஸ்கோவில் அமெரிக்கா முழு உறுப்பினராக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த முடிவு மறுபரிசீலனைச் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-