News Update :

Saturday, October 7, 2017

TamilLetter

சிரட்டையில் தேநீர் பருகிய ஜனாதிபதி..!



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எளிமையான நடவடிக்கைகள் அவர் ஜனாதிபதியாக பதவியேற்றது முதல் ஊடகங்களில் பரவலாக செய்திகளில் வெளிவந்த வண்ணமுள்ளன.

 இதே போன்று இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட நடவடிக்கையும் ஊடகங்களில் வெளியாகியுள்ளதுடன் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இன்று கெக்கிராவ திப்படுவெள நீர்த்தேக்கத்திற்கு அருகில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது தேநீர் பானத்தை ஜனாதிபதி மைத்திரி சிரட்டையில் அருந்தியுள்ளார்.இது அங்கிருந்த மக்களை மட்டுமன்றி ஊடகங்களில் செய்தியாகப் பார்த்த பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 இலங்கை அரசியல்வாதிகள் பலரும் சொகுசு வாழ்க்கையையும், ஆடம்பரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை பலரின் பாராட்டை பெற்றுள்ளது.

 ஜனாதிபதியின் இச் செயற்பாட்டை பலரும் பாராட்டி வருவதுடன் இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற மிகவும் எளிமையான ஜனாதிபதி மைத்திரிபால என கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.



TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-