News Update :

Tuesday, October 3, 2017

TamilLetter

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது

ஏ.எல்.றமீஸ்
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது







பாடசாலை மற்றும் கல்லூரிக்கால  பழைய நினைவுகள் பல பேரை அடிக்கடி உரசிக் கொண்டே போகும்.

நாம் எந்த எல்லையை தொட்டாலும் அதன் நினைவுகள் நம்மை ஆற்றுப்படுத்திக் கொண்டே இருக்கும்.

அதே போன்றதொரு நிகழ்வு அண்மையில் இடம் பெற்றது.


அரசியலில் உச்சம் தொட்ட முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்கு ஒரு நீண்ட கால ஆசை இருந்து வந்துள்ளது.

அது என்னவென்றால் யாருடைய உதவியுமில்லாமல் தனிமையில் போக்குவரத்து பஸ்ஸில் நீண்ட தூரம் பயணிப்பது.

அமைச்சர் ரவூப் ஹக்கிமின் ஆந்த ஆசை நான்கு நாட்களுக்கு முன்பு நடந்தேறியுள்ளது.

மட்டக்களப்பில் தனது கட்சி செயற்பாடுகளை முடித்து விட்டு தனது அமைச்சின் ஊழியர்கள் மற்றும் வாகனங்கள் அனைத்தையும் கொழும்புக்கு அனுப்பி விட்டு தனியாக முன்னாள் மாகாண அமைச்சர் நஸீரின் வாகனத்தில் கொழும்பு நோக்கி புறப்பட்டார் தலைவர் ஹக்கீம்.

இரவு  08 மணியாகிவிட்டது . இரவு உணவுக்காக   தலைவரும்  மாகாண அமைச்சரும் பொலநறுவையிலுள்ள ஒரு ஹெட்டலில் வாகனத்தை நிறுத்திவிட்டு சாப்பிட தயாராகினர்.

அப்பொழுது இவர்கள் சாப்பிட்ட கடையருகே கொழும்பு நோக்கிப் பயணிக்கும் பயணிகள் பஸ் வந்து தரித்து நின்றது.

பஸ்ஸை அவதானித்த அமைச்சர் ஹக்கீம் நஸீரைப் பார்த்து இந்த பஸ்ஸில் ஏறி நான் கொழும்புக்கு போகப் போறேன் நீங்கள் வாகனத்தில் வாருங்கள் என்றார்.

அமைச்சர் நஸீர் தலைவரை அனுமதிக்காத போதும் தலைவரின் விருப்பத்தை தட்ட முடியாமல் தடுமாறினார்.

தலைவர் அவர்கள் ஒரு பெட்சீட்டை மாத்திரம் எடுத்துக் கொண்டு தரித்து நின்ற பஸ்ஸில் எறி கொழும்பு நோக்கிப் புறப்பட்டார்.

அடுத்த நாள் காலை தாறுஸலாத்தில் தலைவரை சந்தித்த அமைச்சர் நஸீர் பயணம் எப்படி என்று கேட்டார்.

பயணம் மிகவும் நிம்மதியாக அமைந்ததாகவும் நீண்ட நாள் ஆசை நிறைவேறியள்ளதாகவும் எனக் கூறி சந்தோசப்பட்டார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-