News Update :

Sunday, October 1, 2017

TamilLetter

தவத்தின் முக்கியத்துவத்தை முகாவுக்கு உணர்த்திய முன்னாள் அமைச்சர் அதாஉல்லா



போராளி பாலமுனை ரஸ்பி

அதாஉல்லாவின் சர்வதிகார கோட்டையை தகர்த்து முஸ்லிம்களின் பேரியக்கத்தின் தன்மானத்தை காத்த வீரத் தளபதி ஏ.எல்.தவம் மாகாண சபை உறுப்பிப்பினராக இல்லாததை பெருநாள் போன்று கொண்டாடுகின்றனர் அதாஉல்லா தரப்பினர்.

எந்த பதிவியும் இல்லாமல் தனிநபராக வெளியேறி அதாஉல்லாவை எதிர்த்து மாகாண சபை உறுப்பினராக அதிகூடிய வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவர் தவம் என்பதை அவர்கள் மறந்து விட்டனர்.

தவத்தை எதிர்ப்பது இலகுவான காரியமல்ல என்பதை அதாஉல்லாவால் சுடப்பட்ட பட்டாசுகள் நமக்கு தெளிவான செய்தியை கூறுகின்றது.
தவம் அக்கரைப்பற்றுக்குள் அடைபட்டுக்கிடக்கும் ஒரு நபரல்ல முஸ்லிம் தேசியத்தை பாதுகாக்கும் தலைமையின் தளபதி

தலைவரால் இனம்காணப்பட்ட போர் வீரன் நேர்மையும் உண்மையும்,விசுவாசமும் அவனது ஆயுதம் அவனை துரோகிகளாகிப்;   போன உங்களால் தோற்கடிக்க முடியாது.

சமூகத்திற்காக இரத்தத்தையும் வியர்வையும் சிந்திய உண்மைப் போராளிகளிடமிருந்து தவத்தை பிரிக்க முடியாது.

தவத்தின் பலத்தை உங்கள் விம்பத்தின் ஊடாக நாங்கள் பார்க்கின்றோம்.

அடையாளம் காட்டித்தந்துள்ளீர்கள் ஆதலால்  உங்களுக்கு எங்கள் நன்றி

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-