News Update :

Friday, October 6, 2017

TamilLetter

பதவி விலகினார் - ரிசாத் பதியுதீனின் சகோதரர்.




அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த  றிப்கான் பதியுதீன் வடக்கு  மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்து இன்று விலகியுள்ளார்.
வடக்கு மாகாணசபையின் 107 ஆவது அமர்வு இன்று கைதடியிலுள்ள அவைச் செயலகத்தில், இடம்பெற்றது.

இதன்போது, அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம், தனது பதவி விலகல் கடிதத்தை றிப்கான் பதியுதீன் கையளித்துள்ளார்.
கட்சியின் அறிவுறுத்தலுக்கு அமைய தாம் பதவியில் இருந்து விலகியதாக அவர் தெரிவித்துள்ளார்.

பதவி விலகியுள்ள றிப்கான் பதியுதீன், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரிசாத் பதியுதீனின் சகோதரராவார்.
இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வடக்கு மாகாணசபை உறுப்பினராகப் பணியாற்றியிருந்தார்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-