News Update :

Friday, October 13, 2017

TamilLetter

ஒலுவில் மக்களால் விரட்டப்பட்ட முன்னாள் முதலமைச்சர் - இன்று காலை சம்பவம்



கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் ஹபீஸ் நஸீர் அகமட் தலைமையிலான குழுவினருக்கு ஒலுவிலில்  வைத்து மக்கள் தூசன வார்த்தைகளால் திட்டிய சம்பவம் இன்று காலை ஒலுவில் துறைமுக விடுதியில் இடம் பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம்   நிந்தவூர் ஜப்பார் அலியின் ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொண்டு விட்டு இரவு தூக்கத்திற்காக ஒலுவிலில் அமைந்துள்ள துறைமுக விடுதியில் தங்கியிருந்தார்.

இதே வேளை முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நஸீர் அகமட் ஏறாவூரைச் சேர்ந்த சில முக்கிய  பிரமுகர்களை அழைத்துக் கொண்டு தலைவர் ரவூப் ஹக்கீமை இன்று காலை சந்தித்தார்.

தலைவர் ரவூப் ஹக்கீமிடம் ஹபீஸ் நஸீருக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டுமென ஏறாவூரைச் சேர்ந்தவர்கள் இச்சந்திப்பில் வேண்டிக் கொண்டனர்.
இதைக் கேட்டதும் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மிகவும் ஆத்திரத்துடன் எதுவுமே பேசாமல் எழுந்து சென்றுள்ளார்.

இச் சந்தர்ப்பத்தில் தலைவரை சூழ்ந்து நின்ற கட்சிப் போராளிகள் முதலமைச்சருக்கும் அவரோடு இணைந்து வந்தவர்களுக்கும் காரசாரமான வார்த்தைப் பிரயோகங்களால் திட்டினர். நிலைகுலைந்த முன்னாள் முதல்வர் ஒட்டம் பிடித்தார்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-