News Update :

Tuesday, October 3, 2017

TamilLetter

அடுத்த ஆண்டில் மாகாணசபைத் தேர்தல்கள் நடப்பது சந்தேகமே! - மகிந்த தேசப்பிரிய




பதவிக்காலம் முடிந்த மாகாணசபைகளுக்கான தேர்தல் 2018ஆம் ஆண்டு நடைபெறுவது சந்தேகமே என்று தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மாகாணங்களின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளன. இருப்பினும் இவற்றின் தேர்தலை நடத்தவேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.

20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலமாக அதனைத் தள்ளிப் போடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்த வேளையில் உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலால் அது கைவிடப்பட்டது.

பின்னர் அவசரமாக மாகாணசபைத்திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்து அதனை நிறைவேற்றியது. இதன்படி மாகாணங்களுக்கான எல்லை நிர்ணயம் செய்யப்படவேண்டும். இது தொடர்பாக மகிந்த தேசப்பிரிய கருத்துத் தெரிவிக்கையில்,

 அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்குள் மூன்று மாகாணங்களினதும் தேர்தல் நடத்தப்படவேண்டும். தேர்தல் நடத்துவதற்கு முன்னர் எல்லை நிர்ணயம் செய்வதுடன், அனைத்தும் மீளாய்வு செய்யப்படவேண்டும். இந்நிலையில், இப்பணிகள் அனைத்தும் 2018ஆம் ஆண்டு நிறைவடையும் என்பது சாத்தியமற்றது. ஆகவே 2018ஆம் ஆண்டு தேர்தல் நடைபெறும் என்பதும் சந்தேகமே எனத் தெரிவித்தார். 

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-