News Update :

Tuesday, October 10, 2017

TamilLetter

புற்றுநோய் உண்டாக்கும் விஷக் கூறுகள் ப்ரொய்லர் கோழியில்: பரிசோதனையில் கண்டுபிடிப்பு!






இறைச்சிக்காக மக்கள் உண்ணும் ப்ரொய்லர் கோழியின் ஈரல் மற்றும் கல்லீரலில் விஷக் கூறுகள் இருப்பது ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக வேதியல் துறையால் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
வேதியியல் துறையின் பேராசிரியர் திருமதி.பெரேரா தலைமையில் விஞ்ஞானிகள் குழுவினால் கோழி இறைச்சி வகைகளில் நடாத்தப்பட்ட பரிசோதனைகளில் இது கண்டறியப்பட்டுள்ளது.

பரிசோதனை குறித்து மேலும் தெரியவருவதாவது,

ப்ரொய்லர் கோழிகளின் வளர்ச்சிக்காக ஹோமோன், வைட்டமின், தாது உப்புக்கள் அடங்கிய உணவுப்பொருட்கள் கொடுக்கப்படுகின்றன. மற்றும் கோழிகளின் குடலில் உள்ள சிறிய நுண்ணங்கிகளை அழிக்க ஆர்சனிக் அடங்கிய கூறுகள் கொடுக்கப்படுகின்றது.இவை கோழியின் வயிற்றுக்குள் விஷ ஆர்சனிக்களாக மாற்றமடைகின்றது.

மக்கள் நீண்ட காலமாக உணவுக்கு ப்ரொய்லர் கோழி இறைச்சியை பயன்படுத்துவதனால் இந்த விஷ ஆர்சனிக் மனித உடம்பிற்குள் சேமிக்கப்படும் அபாயம் உள்ளது.

இவ் விஷ ஆர்சனிக் கூறுகள் புற்றுநோயை உண்டாக்கக்கூடியவை மற்றும் உடலின் வேறு உறுப்புகளுக்கு இக் கூறுகள் கடத்தப்பட்டு உடல் ரீதியான பல பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

எனவே மக்களை ப்ரொய்லர் கோழிகளின் ஈரல் மற்றும் கல்லீரல் போன்றவற்றை உணவிற்குள் குறைந்த அளவு எடுப்பதற்கும், தவிர்ப்பதற்கும் அவர்களால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-