News Update :

Sunday, October 1, 2017

TamilLetter

மகளுக்காக கண்ணீர் சிந்திய ஒபாமா!



தம்முடைய மூத்த மகள் மலியாவை பல்கலைக்கழக வளாகத்தில் தமது வாகனத்திலிருந்து இறக்கி விட்ட பின், தன்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை என முன்னாள் அமெரிக்க பராக் ஒபாமா கூறியுள்ளார்.
தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இது தொடர்பாக  முன்னாள் அதிபர் ஒபாமா விவரித்தாவது:
என்னுடைய மூத்த மகள் மலியாவை ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் சேர்த்தேன். பல்கலைக்கழக வளாகத்தில் இறக்கி விட்ட பின் என்னால் கண்ணீரை பட்டுப்படுத்த முடியவில்லை.
அந்த உணர்வு, இதயத்தை திறந்து அறுவைச் சிகிச்சைச் செய்வதைப் போல இருந்தது. மலியாவின் முன் நான் என் கண்ணீரைக் கட்டுப்படுத்தியது சற்று பெருமையாக இருந்தது. அதன் பின் அந்தப் பிரிவு வருத்தம், அடங்காத கண்ணீராக வெளிப்பட்டதை தன்னுடைய மெய்க்காவல் பிரிவினர் பார்த்தும் பார்க்காதது போல் இருந்து விட்டனர். 
நாம் வாழ்க்கையில் எதைச் சாதித்து இருந்தாலும், நம் வாழ்வின் இறுதியில் நம் குழந்தைகள் நமக்கு அளிக்கும் மகிழ்ச்சியை மட்டுமே நாம் அதிகமாக நாம் நினைவில் வைத்து கொள்வோம். இவ்வாறு முன்னாள் அதிபர் ஒமாபா தமது உரையில் குறிப்பிட்டார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-