News Update :

Tuesday, October 10, 2017

TamilLetter

வாகன விபத்து; 20 வயதுடைய இளைஞன் பலி






மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் நேற்றிரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அச்சுவேலி தெற்கு நெருப்புமூட்டி பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் நாவற்குழியைச் சேர்ந்த சஜீபன் என்ற 20 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து முன்கம்பத்துடன் மோதியதில் படுகாயமடைந்த இளைஞன் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிக்சை பலனின்றி குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-