News Update :

Monday, October 2, 2017

TamilLetter

பிக் பாஸ் சீசன் -2: கமலுக்கு பதிலாக நடிகர் சூர்யா களமிறங்குவார்?




சென்னை, அக்.2- ஒருவழியாக பிக்போஸ் 100 நாள் வேலைத் திட்டம் நிறைவுக்கு வந்துவிட்டது. பலரும் வெறுத்த ஆராவ்க்கு வெற்றியாளர் பட்டம் போனதில் இன்னும் வெறுத்துப்போய் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அடுத்த சீசனுக்கு பிக் போஸ் வேலை நடிகர் சூர்யாவுக்குச் செல்லலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் பிக் பாஸ் சீசன் 2-க்கு வேலைகளைத் தொடங்கிவிட்டது விஜய் டிவி. இந்த முறையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குவாரா? என்ற கேள்வி இருந்தது. கமலும் இரண்டாவது சீஸனுக்கு தயாராக இருப்பதாகத்தான் கூறியிருந்தார்.

ஆனால், பிக் பாஸில் அவருக்கு கிடைத்த மைலேஜ், இந்தியன்-2 என்ற பட வாய்ப்புக் கிடைக்கக் காரணமாக அமைந்துவிட்டது. எனவே சீசன் 2-க்கு வேறு ஒரு பிரபலத்தை நாட முடிவு செய்துவிட்டனர்.

இந்த முறை நிகழ்ச்சியை வழங்கப் போகிறவர் நடிகர் சூர்யா என்கின்றன முதல் கட்டத் தகவல்கள். அந்த சேனலுக்கு சூர்யா ஒன்றும் புதிதில்லை. ஏற்கெனவே 'நீங்களும் வெல்லலாம்-ஒரு கோடி' நிகழ்ச்சியை நடத்திக் கொடுத்தவர் அவர்தான்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-