News Update :

Saturday, September 23, 2017

TamilLetter

அக்கரைப்பற்று முன்னாள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.ஜெமீல் ஹட்டனில் அதிரடி



அக்கரைப்பற்று முன்னாள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.ஜெமீல் ஹட்டனில் அதிரடி


ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் இறை வழிபாட்டை மேற்கொள்ளச் சென்ற பெண்ணின் பணப்பையை திருடிய, பெண்ணொருவரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பணப்பையில் இருந்த தன்னியக்க இயந்திர (ஏ.டி.எம்) அட்டையை எடுத்து பொருட்களைக் கொள்வனவு செய்ததுடன், பணத்தையும் எடுத்திருந்தார்.

இந்த நிலையில் விசேட சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸார் குறித்த பெண்ணைக் கைது செய்துள்ளனர்.
ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த, 46 வயதான பெண்ணையே, நேற்றிரவு 6 மணியளவில் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண், அந்த அட்டையை (கார்ட்) பயன்படுத்தி, 30 ஆயிரத்து 790 ரூபாய்க்கு, ஆடைகள் மற்றும் தேவையான பொருட்களையும் கொள்வனவு செய்துள்ளார்.

ஆடைகளை கொள்வனவு செய்யும்போது, சி.சி.டி.வி கமெராவில் பதிவாகியிருந்த காட்சிகளை அடிப்படையாகக் கொண்டே, சந்தேக நபரான அப்பெண்ணை கைதுசெய்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரான பெண்ணை, ஹட்டன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-