தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு தயார் - பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்
அரசு, அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தைக் கைவிட்டால் கிழக்கு மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே இருப்பதாக அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
‘
‘விரைவில் அந்தத் தேர்தல் நடத்தப்படுவது நல்லது என்றே நினைக்கின்றோம். ‘‘2012ஆம் ஆண்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெற்றது. அதில் குளறுபடிகள், – மோசடிகள் நடைபெற்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகச் சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலேயே ஆசனங்களை இழந்தது. இப்போது தேர்தல் நடைபெற்றால், அவ்வாறான குளறுபடிகள் – மோசடிகள் நடைபெறாது என்றே எதிர்பார்கின்றோம்’’ -என்றார்.