News Update :

Wednesday, September 27, 2017

TamilLetter

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர் ரவுப் ஹக்கீம் ஆகியோரால் பல அபிவிருத்தி திட்டங்கள் மக்களிடம் கையளிப்பு 
பதுளை நகரில் புதிய வாகனத் தரிப்பிடம் மக்களிடம் கையளிப்பு - ஊவா மாகாணத்திற்கு 320 புதிய அரச சேவை நியமனங்கள்

நாட்டில் அரசியல் ஸ்திரப்பாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சர்வதேச ரீதியாக அனைவருடைய உதவியும் இலங்கையின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு குறைவின்றி கிடைத்து வருகின்றது என்றும் அந்த அபிவிருத்தி செயற்பாடுகளில் எவ்வித முறைகேடுகள் அல்லது மோசடிகள் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
இன்று (27) முற்பகல் பதுளை மாவட்டத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்காது, அந்த தவறுகள் தொடர்ந்தும் இடம்பெறுவதற்கு கடந்த அரசாங்கம் இடமளித்த போதும் இன்று எவ்வித அரசியல் வேறுபாடுகளுமின்றி ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்திற்கு ஏற்ப எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் அரசாங்கத்திற்கு எத்தகைய குற்றச்சாட்டுக்கள் விமர்சனங்களை முன் வைத்தபோதும் உலகில் அனைத்து நட்பு நாடுகளினதும் உதவியுடன்  நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை பின்னோக்கித் திருப்புவதற்கு எவருக்கும் முடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பதுளை, ஹாலி எல மற்றும் எல்ல பிரதச செயலாளர் பிரிவுகளில் உள்ள 1,10.000 மக்களுக்கு நேரடியாக குடி நீரை வழங்கும் பதுளை, ஹாலி எல மற்றும் எல்ல நீர் வழங்கல் திட்டத்தை இன்று (27) முற்பகல் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன மக்களிடம் கையளித்தார்.
மகாவலி கங்கையின் பிரதான கிளையாறான பதுலு ஓயவை தெமோதரவில் இடை மரித்து இந்த நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 15,000 கன மீட்டர் நீரை சுத்திகரிக்கும் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றுடன் 1,32000 கன மீட்டர் கொள்ளளவையுடைய 17 மீட்டர் உயரமான அணைக்கட்டுடன் இந்த நீர்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது.
சுத்திகரிக்கப்படும் குடி நீரை வழங்குவதன் மூலம் பிரதேச மக்களின் சுகாதார மற்றும் வாழ்க்கைத்தரம் மேம்படும் என்பதுடன், பிரதேச மக்களின் விவசாயத்திற்கான நீர் தேவைகளுக்காகவும் நீரை வழங்க எதிர்பார்க்கப்படுகின்றது.
 5.jpg nggid048259 ngg0dyn 320x210x100 00f0w010c011r110f110r010t0106.jpg nggid048260 ngg0dyn 320x210x100 00f0w010c011r110f110r010t010
இலங்கை அரசாங்கத்தினதும் அமெரிக்க கடன் உதவியின் கீழும் இத்திட்டத்திற்காக 11800 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
நினைவுப்படிகத்தை திரை நீக்கம் செய்து வைத்து நீர் வழங்கல் திட்டத்தை ஜனாதிபதி மக்களிடம் கையளித்தார்.
 பதுளை நகரில் பாரிய குறைபாடாக இருந்து வந்த வாகனத் தரிப்பிடத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஊவா மாகாண சபையினால் 95 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வாகன தரிப்பிடத்தையம் ஜனாதிபதி இன்று திறந்து வைத்தார்.
ஒரே நேரத்தில் சுமார் 200 வாகனங்களை நிறுத்தி வைக்கக்கூடிய இந்த வாகனத் தரிப்பிட கட்டிடம் 2 மாடிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாண சபைக்கு அபிவிருத்தி அதிகாரிகள், விவசாய உதவியாளர்கள், வருமான பரிசோதகர்கள், விவசாய ஆலோசகர்கள், தமிழ் மொழி மூல ஆசிரிய ஆலோசகர்கள் உள்ளிட்ட 320 அரச சேவை நியமனங்கள் வழங்கும் நிகழ்வும் இதனோடு இணைந்ததாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பதுளை நகருக்கு சென்ற ஜனாதிபதி ,  அங்கு புதிய வீதி சமிக்ஞை முறைமையையும் திறந்து வைத்தார்.
அமைச்சர்களான ரவுப் ஹக்கீம், ஹரின் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர்களான லக்ஷ்மன் செனவிரத்தன, டிலான் பெரேரா, பிரதி அமைச்சர் சுமேத டி ஜயசேன, ஊவா மாகாண ஆளுநர் எம்.பி.ஜயசிங்க, முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-