இறக்காமம் முன்னாள் தவிசாளரிடம் வாங்கிக்கட்டிய முன்னாள் அமைச்சர்
இறக்காமம் தஸ்லின்
தற்காலத்தில் அதிகமான மரண வீடுகளுக்கு செல்லும் மக்களால் தோற்கடிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஒருத்தர் இறக்காமம் பிரதேசத்தில் உள்ள மரண வீடொன்றிற்கு சென்றுள்ளார்.அதே வீட்டிற்கு முஸ்லிம் காங்கிரஸின் இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஜபீர் மௌலவியும் சென்றிருந்தார்.
முன்னாள் தவிசாளர் ஜபீர் மௌலவியை முன்னாள் அமைச்சர் கண்டதும் எனக்கு எதிராக அதிகமாக எழுதுகிறீர்கள் உடன் நிறுத்த வேண்டுமென்று ஆவசேமாக கூறியுள்ளார் அந்த முன்னாள் அமைச்சர்.
இதற்கு பதிலளித்த ஜபீர் மௌலவி நான் உண்மையைத்தானே எழுதுகிறேன்.நீங்கள்தான் பொய்களை பரப்பி மக்களை ஏமாற்றுகின்றீர்கள் என்றார்.
இப் பதிலை சற்றும் எதிர்பார்க்காத முன்னாள் அமைச்சர் கோபத்துடன் உங்கள் தலைவர் ரவூப் ஹக்கீமை மிக விரைவில்; விரட்டுவோம் அப்போது என்னோடு வந்து சேர வேண்டுமென முன்னாள் அமைச்சர் கூறினார்.
எங்கள் தலைவரை உங்களால் மாத்திரமல்ல வேறு எவராலும் கூட விரட்ட முடியாது ஏனென்றால் உண்மை எங்கள் பக்கம் உள்ளது என்றார் ஜபீர்.