News Update :

Saturday, September 9, 2017

TamilLetter

முஸ்லிம் காங்கிரஸ் நிகழ்வில் தேசிய காங்கிரஸ் சபீசுக்கு கௌரவம்

முஸ்லிம் காங்கிரஸ் நிகழ்வில் தேசிய காங்கிரஸ் சபீசுக்கு கௌரவம்


 

ஏ.எல்.றமீஸ்
 

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் அவர்களின் முயற்சியினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் அக்கரைப்பற்று மண்ணில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வோடு; புதிய திட்டங்களை ; ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக் கிழமை (15) நடைபெறவுள்ளது.

 

இதில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும்,கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அகமட்;,சுhதார பிரதியமைச்சர் பைஸல் காசீம்,விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ்,பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர,;;  மாகாண சுகாதார அமைச்சர்,மாகாண கல்வியமைச்சர்,மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர்,விவசாய அமைச்சர் ஆகியோர்; விசேட அதிதியாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
 

அத்தோடு தேசிய காங்கிரஸின் முக்கியஸ்தரும் அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும்,முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் மக்கள் தொடர்பு அதிகாரியுமான எஸ்.எம்.சபீஸ் கௌரவ அதிதியாகவும் கலந்து கொள்ளவுள்ளார்.
 

அக்கரைப்பற்று 6ம் பிரிவில் பிரதியமைச்சர் பைஸல் காசிமின் ஒரு கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட சுகாதார நிலைய கட்டிடத்துக்கான காணியை சபீஸ் வழங்கியிருந்தார்.சபிஸின் பெரும்தன்மையை கௌரவிக்க வேண்டுமென்பதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம்.அவரை இந் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
 

மாகாண சபை உறுப்பினர் தவத்தினதும்.சபீஸ் அவர்களினதும் இந்த நாகரிகமான அரசியல் நகர்வு இளைஞர்களின் எதிர்கால நடவடிக்கைக்கு உந்து சக்தியாக இது மாறும் என்பதில் ஐயமில்லை

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-