முஸ்லிம் காங்கிரஸின்
உச்சக்கட்ட அரசியல் வியூகம்
கிழக்கில் ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸின் பலத்தை குறைக்க அதன் அதிருப்திக் குழு பல்வேறு பிரசாரங்களை முன்னெடுத்து
வரும் நிலையில் கட்சியின் பலத்தை தக்க வைத்துக் கொள்வதோடு அதனை மேலும் அதிகரிக்கும்
வகையில் கட்சியின் செயலாளர் நாயகமாக கல்முனையைச் சேர்ந்த ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம்
காரியப்பர் நியமிக்கப்பட்டுள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸின்
செயலாளர் பதவி தொடர்பாக அக் கட்சிக்குள் கடந்த கலமாக பவ்வேறு உட்புசல்கள் நிலவி வந்தன.இந்
நிலையில் அண்மையில் நடந்த கட்சியின் பேராளர் மாநாட்டின் போது செயலாளரை நியமிக்கும்
அதிகாரம் கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கிமுக்கு வழங்கப்பட்டிருந்தன.அதன் பின்னர் தற்காலிக
செயலாளராக மன்சுர் ஏ.காதர் நியமிக்கப்பட்டிருந்தார்.
எவ்வாறாயினும்
முஸ்லிம் காங்கிரஸிற்கு எதிரான ஒரு அமைப்பை கட்டியெழுப்பும் நோக்கில் கிழக்கில் பல்வேறு
வியுகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.அவற்றை தகர்த்தெறியும் வகையில் கட்சியின் பலத்தை
மேலும் அதிகரிக்கும் வகையிலும் நிசாம் காரியப்பரை செயலாளராக நியமித்த ஹக்கீம் இது தொடர்பான
சட்டபுர்வ ஆவணங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளார்.
சட்டத்துறையில்
பாண்டித்தியம் பெற்ற நிசாம் காரியப்பர்.மஸ்லிம் காங்கிரஸில் பிரதி செயலாளர் நாயகமாக
பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது