News Update :

Thursday, September 28, 2017

TamilLetter

அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் வாகனம் மோதி ஒருவர் பலி



 அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் வாகனம் மோதி ஒருவர் பலி







அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் வாகனம் மோதியதில்

ஒருவர்  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனா்.

இச் சம்பவம் இன்று அதிகாலை ஒரு மணியளிவில் அம்பாரையில் இடம் பெற்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான விமலவீர திஸாநாயக்கவின் கார் மோதியதிலே குறித்த நபா் உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் அம்பாரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் சைக்கிளை செலுத்தியவா் உயிரிழந்தார்.

எனினும் படுகாயமடைந்த மற்றைய நபா் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து இடம்பெற்ற போது பாராளுமன்ற உறுப்பினா் காரினுள் இருந்த போதும்  சம்பவம் தொடா்வில் அவரது காரை செலுத்தியவர் 
பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-