News Update :

Wednesday, September 27, 2017

TamilLetter

'சிம்பு-நயன்' இடையே 'ரஜினி' பஞ்சாயத்து! முகத்தை திருப்பிக் கொண்ட நயன்தாரா!




பிக் பாஸ்' வீட்டில் வைத்து நயன்தாரா-சிம்பு இடையேயான பஞ்சாயத்து பேசப்பட்டது. பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள்  சினிமா பிரபலங்கள் போன்று நடித்துக் காட்டும்படி பணிக்கப்பட்டனர். 
அதற்காக அவர்களுக்கு உடைகளும் அளிக்கப்பட்டன. ஹரிஷ் கல்யாண், சிம்புவாகவும், பிந்து மாதவி, நயன்தாராவாகவும், கணேஷ், அஜீத்தாகவும், ஆரவ், ரஜினியாகவும், சினேகன், ராமராஜனாகவும் நடிக்குமாறு உத்தரவிட்டது.  

சிம்புவாகவே மாறிவிட்டார் ஹரிஷ். 'அந்தப் பிரச்சனை'யை நயன்தாராவுடன் பேசித் தீர்க்க முயன்றார். நயன்தாராவோ 'நான் உன்னுடன் பேச விரும்பவில்லை' என்று முகத்தில் அடித்தது போன்று கூறிவிட்டார்.
ரஜினி நடித்த ஆரவிடம் தனக்கும் நயனுக்கும் இடையேயான பிரச்சனையைத் தீர்த்து வைக்குமாறு சிம்பு கூறினார். ரஜினி, பஞ்சாயத்து பண்ண வந்தபோதிலும் நயன்தாரா ஒத்துழைக்கவில்லை. 

குட்டி மேடையில் குட்டிப் பிசாசு பாடலுக்கு செம ஆட்டம் ஆடினார் சிம்பு. அதை பார்த்த நயன்தாரா கோபத்தை எல்லாம் மறந்து, சிம்புவைப் பாராட்டினார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-