News Update :

Wednesday, September 20, 2017

TamilLetter

பிரதியமைச்சர் ஹரீஸ் தனது பதவியை இராஜினமா செய்வாரா? மக்கள் ஆத்திரத்துடன் கேள்வி



பிரதியமைச்சர் ஹரீஸ் தனது பதவியை இராஜினமா செய்வாரா? மக்கள் ஆத்திரத்துடன் கேள்வி


 எஸ்.எல்.பாரீஸ் அகமட்
மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச்சட்ட மூலத்தை தான் ஆதரிக்கப் போவதில்லையென்றும் அப்படி முஸ்லிம் காங்கிரஸ் ஆதரித்தால் எனது பிரதியமைச்சர் பதவியை இராஜினமா செய்வேன் என்று மக்கள் மத்தியில் சூழுரைத்த  விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தனது பதவியை எப்போது இராஜினமா செய்வார் என பொதுமக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

பிரதியமைச்சர் ஹரீஸ் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக பல இடங்களில் பல கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அரசாங்கத்தால் கொண்டுவரப்படவுள்ள மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு பெரும் பாதிப்பாக அமையவுள்ளது. ஆகவே இச்சட்ட திருத்தத்துக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமென்றார்.

அத்தோடு தான் இதற்கு எதிராக பாராளுமன்றத்தில் வாக்களிப்பேன் என்றும் முஸ்லிம் காங்கிரஸ் வாக்களித்தால் எனது பிரதியமைச்சர் பதவியை இராஜினமா செய்வேன் என்று சபதம் இட்டிருந்தார்.

பிரதியமைச்சர் ஹரீஸின் இப் பேச்சு முஸ்லிம் பிரதேசத்தில் அண்மைக் காலமாக பேசு பொருளாக பேசப்பட்டு வந்தது.

இப்படியான சூழ்நிலையில் நேற்று இலங்கை பாராளுமன்றம் கொண்டு வந்த மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டத்திற்கு பிரதியமைச்சர் ஹரீஸ்  வாக்களித்திருந்தார்.

பிரதியமைச்சர் ஹரீஸின் இச் செயல் முஸ்லிம்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தைத்தந்தது.

பிரதியமைச்சர் ஹரீஸ் பல வருடங்களாக மேடைகளில் வீரவசனங்கள் பேசுவதும் அது முடிந்தால் தொலைபேசியை நிறுத்திவிட்டு துாங்கி விடுவதும் அவரின் வழமை என கட்சியின் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்தனர்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-