News Update :

Sunday, September 24, 2017

TamilLetter

பிரதியமைச்சர் ஹரிஸைவிட பைஸல் காசீம் பொறுப்புடன் செயற்படுகிறார் - போராளிகள் கருத்து

பிரதியமைச்சர் ஹரிஸைவிட பைஸல் காசீம் பொறுப்புடன் செயற்படுகிறார் - போராளிகள் கருத்து



ஆர் சரிபுதீன் - கல்முனை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சிக்காக அளிக்கப்பட்ட வாக்குகளால்தான் பிரதியமைச்சர் ஹரீஸ்,பைஸல் காசீம்,மன்சூர் ஆகியோர் பாராளுமன்றம் சென்றார்களே தவிர அவர்களுக்காக மக்கள் வாக்களிக்கவில்லையென முஸ்லிம் காங்கிரஸின் போராளிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

2010ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் கூட கட்சியினால் இவ் மூன்று பேரும் நிறுத்தப்பட்டு இம் மூன்று வேட்பாளருக்கும் வாக்களிக்குமாறு கட்சி தலைமை கூறியதனால் ஒட்டு மொத்த வாக்களார்களும் இவர்களுக்கு வாக்களித்தனர்.இதில் இரண்டு பேர் வெற்றியடைந்நதனர்.

அதே போன்று இறுதியான நடைபெற்ற தேர்தலில் மக்களின் பாரிய எதிர்ப்புக்கு மத்தியில் இம் மூன்று பேருக்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்சி சந்தர்ப்பம் வழங்கியது.

கட்சி தோற்றுவிடக் கூடாது என்பதற்காகவே மக்கள் இவர்களுக்காக வாக்களித்து வெற்றிபெறச் செய்தார்கள்.

ஓட்டு மொத்த பிரதேசங்களும் சேர்ந்து வாக்களித்த எம்.ஐ.எம்.மன்சூர் தனது ஊரைத்தவிர வேறு எந்த பிரதேசத்திற்கும் அவரால் எந்தவிதமான பிரயோசனமும் இல்லாமல் போய்விட்டது.

அதே போன்று எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களுக்கு தலைவரால் பிரதியமைச்சர் பதவி வழங்கப்பட்டது.இந்த அமைச்சின் மூலம் எந்த பிரதேசத்திற்கு குறிப்பிட்டு சொல்லக் கூடிய திட்டத்தை அவர் செய்துள்ளார்.

ஒரு கட்சியின் ஒரு போராளி தனது தேவை நிமிர்த்தம் பிரதியமைச்சர் ஹரிஸை சென்று பார்க்க முடியாது.தொலைபேசியை நிறுத்தி வைத்துவிட்டு மறைந்துவிடுவார்.கொழும்பிலிருந்து ஊருக்கு வந்தால் கூட அவரை யாரும் சந்திக்க முடியாது. அம்பாரை மாவட்டத்தில் கட்சியின் தலைவர் வரும் நிகழ்வுக்கு மாத்திரம் வந்து முகத்தை காட்டிவிடுவது அவரின் வழமை.
கட்சியின் வளர்ச்சிக்காக அவர் எதை செய்துள்ளார்.எத்தனை நபர்களை முஸ்லிம் காங்கிரஸில் இணைத்துள்ளார்.

போராளிகளின் இரத்தத்தாலும் வியர்வையாலும் கட்டி வளர்த்த இயக்கத்தில் குளிர்காய்வதில் மட்டுமே குறியாக இருக்கின்றார்.தனது வெற்றிக்கு பங்களிப்பு செய்த இந்த போராளிகளுக்கு அவரால் என்ன செய்ய முடிந்தது. அவரின் பிரதியமைச்சர் பதவியால் கட்சிக்கு என்ன பிரயோசனம்.
அந்த வகையில் நாங்கள் இட்ட மூன்று புள்ளடிகளில் பிரதியமைச்சர் பைஸல் காசீமுக்கு இட்டது ஓரளவு கட்சிக்கும் போராளிகளுக்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

தேவை கருதி  பிரதியமைச்சர் 
பைஸல் காசீமின்   தொலை பேசிக்கு அழைப்பு விடுத்தால் அவர் யாரு என்று பாராமல் நம்மலோடு உரையாடுகிறார்.எமது பிரச்சினையை காது கொடுத்து கேட்கிறார.; முடிந்தளவு அப்பிரச்சினையை தீர்த்து வைக்க முயற்சிக்கிறார். எல்லா பிரதேசங்களுக்கும் சென்று போராளிகளை சந்திக்கிறார்.சுக துக்கங்களில் பங்கெடுக்கிறார்.பல அபிவிருத்தி திட்டங்களை களத்தில் நின்று செயற்படுத்துகிறார் என்பது போராளிக்கு ஆறுதலான விடயம்

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-