துபாயில் உள்ள பால்ம் ஜுமெரியா என்ற
பகுதிக்கு மேலே விமானத்தில் பறந்த போது விமானகளின் அறையில் உள்ள ஜன்னலுக்கு
வெளியே வந்து 'செல்பி' படம் எடுத்துள்ளார் விமானி. பாதி உடல் வெளியே,
மீதி உடல் உள்ளே என்ற நிலையில் புகைப்படத்தின் பின்னணியில் துபாய் இருப்பது
போன்று அவர் செல்பி எடுத்துள்ளார்.
பின்னர், சமூக வலைத்தலைத்தில் அவர் தனது புகைப்படத்தை வெளியிட்டதும் அது பரபரப்பான சர்ச்சைக்கு உள்ளானது.
இது நிச்சயமாக உண்மையான புகைப்படமாக
இருக்காது. 'கிரீன் ஸ்கிரின்' என்ற தொழில்நுட்ப வசதியை 'போட்டோஷாப்'
செய்துள்ளார்’ என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
‘வானத்தில் பறந்துக்கொண்டு இருக்கும்போது
விமானியின் தலைமுடி கலையாமல் நேராக இருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது’
என சிலர் கூறியுள்ளனர். மணிக்கு 100.கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும்
நிலையில் எதிர்த் திசையை நோக்கி கையை வெளியே நீட்டி புகைப்படம் எடுக்க
முடியாது.
ஏனெனில், இவ்வளவு வேகத்தில் பறக்கும் போது
அவரது கை ஆடாமலும், புகைப்படம் மிகவும் தெளிவாகவும் எடுக்க வாய்ப்பே இல்லை
எனச் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில், சிலர் இந்த விமானியின்
செல்பி மோகத்தை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளனர். இவரை நம்பி சிலர் அந்த
விமானத்தில் இருக்கக்கூடும். அவர்களின் பாதுகாப்பை மதிக்காமல் இந்த விமானி
நடந்து கொண்டுள்ளார் என்று அவர்கள் சாடினர்.