இதனடிப்படையில் சரத் வீரசேகர நாளை ஜெனிவா பயணமாகவுள்ளார்.
ஜெனிவாவில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற மனித உரிமை கூட்டத் தொடரின் போது நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதி மணிவண்ணனுக்கும் சரத் வீரசேகரவுக்கு கடும் சொற்போர் இடம்பெற்றிருந்தது.
சரத் வீரசேகர, மணிவண்ணனை கடுமையாக சாடியிருந்தார். இவ்விடயம் மஹிந்த அணியினரால் பெரிதாக பேசப்பட்டதோடு தென்னிலங்கையிலும் பெரிதுப்படுத்தி காட்டப்பட்டது.
புலிகளுக்கு எதிராக குரல் கொடுத்த சரத் வீரசேகர நாடு திரும்பியதும் அவருக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் சரத் வீரசேகரவை மஹிந்த அணியினர் ஜெனிவாவுக்கு நாளை அனுப்பி வைக்கின்றனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேர வையின் 36 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை குறித்த விவகாரங்கள் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவில்லை. எனினும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் தமது உரைகளின்போது இலங்கை சம்பந்தமான கேள்விகளை எழுப்பவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை மனித உரிமைகள் அமைப்புகள் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக போர்க் குற்ற வழக்கு தாக்கல் செய்துள்ளன.
அவ்விவகாரம் தொடர்பில் தற்போது சர்வதேசம் மிகுந்த அவதானம் செலுத்தியுள்ளது. அத்துடன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய இறுதிக் கட்டப் போர் நடவடிக்கைகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் உள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
எனவே அதனை அடிப்படையாகக் கொண்டு இலங்கை மீதான போர்க் குற்ற விவகாரம் இறுக்கமடையலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடரில் இலங்கையிலிருந்து அமைச்சர்கள் குழு பங்கேற்கவில்லை. இவ்வா றான நிலையிலேயே ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ஜெனிவாவில் நடைபெறும் உப குழுக் கூட்டங்களில் பங்கேற்க ஜெனிவா செல்லவுள்ளார்.