News Update :

Saturday, September 23, 2017

TamilLetter

தொகுதிவாரித் தேர்தல் - கலங்கும் அதாஉல்லா



குல்ஸான்


புதிய தேர்தல் சட்டமூலத்தினால் சிறிய கட்சிகள் பெரும்பான்மை கட்சிகளின் தயவை நாடவேண்டிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் அந்த நிலை வேறுபட்டு காணப்படுகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு போட்டியாக எந்த ஒரு அரசியல் கட்சிகளும் வர முடியாது.அப்படி வந்தாலும் எந்தவிதமான தாக்கத்தையும் அது ஏற்படுத்தப் போவதில்லை.

கிழக்கு மாகாணத்தை பொறுத்த வரைக்கும் ஒரு சமூகம் தனித்து நின்று அட்சியமைக்க முடியாது.இரண்டு சமூகங்கள் ஒன்று சேரும் போதே ஆட்சி அதிகாரத்தை எட்ட முடியும்.

கிழக்கின் குறிப்பாக அம்பாரை மாவட்டத்தில் கல்முனைத் தொகுதியில்  முஸ்லிம் காங்கிரசுக்கு போட்டியாக உதிரியான வாக்குகளை கொண்டிருக்கும் அமைச்சர் ரிஷாட்,முன்னாள் அமைச்சர் அதாஉல்லா ஆகியோர் இத் தொகுதியை கைவிட வேண்டிய நிலை ஏற்படும்,

பொத்துவில் தொகுதியை எடுத்துக் கொண்டால் ஏற்கனவே உள்ளடக்கப்ட்ட பிரதேசங்களில் நிந்தவூர் பிரதேசத்தை தனியாக பிரித்து அக்கரைப்பற்று பிரதேச சபையோடு இறக்காமம் பிரதேசம் உள்ளடக்கப்பட்டு தனியான புதிய தொகுதியாக மாற்றம் பெறவுள்ளது.

அதே போல் அட்டாளைச்சேனை,அக்கரைப்பற்று மாநகர சபை எல்லையோடு ,பொத்துவில் ஆகியன பொத்துவில் தொகுதிக்குள் வழமை போன்று இருந்துவிடும்.

அதிகமான வாக்குகளைக் கொண்ட சம்மாந்துறை.நாவிதன்வெளி மத்திய முகாம் ஆகிய பிரதேசங்கள் தனியான தொகுதியாக பிரிக்கப்படும்
அதே போன்று தமிழ் பிரதேசங்களான

காரைதீவு,ஆலையடிவேம்பு,திருக்கோவில் ஒரு தொகுதிக்குள் வழமை போன்று செயற்படும்.

அம்பாரை சிங்கள பிரதேசங்கள் நான்கு தொகுதியாக பிரிக்கப்பட்டு நான்கு நேரடி பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவர்.

இதன் மூலம் அம்பாரை மாவட்டம் ஒன்பது தொகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒன்பது நேரடி உறுப்பினர்கள் மக்களால் தெரிவு செய்யப்படுவர்.

அந்த வகையில் முஸ்லிம்களுக்கு நான்கு தொகுதிகளும்,சிங்களவர்களுக்கு நான்கு தொகுதிகளும் தழிர்களுக்கு ஒரு தொகுதியுமாக காணப்படும்.
அட்டாளைச்சேனை,அக்கரைப்பற்று  மாநகர சபை எல்லை  ,பொத்துவில் ஆகிய பிரதேசங்கள் ஒரு புரிந்துணர்வு அடிப்படையில் செயற்படுவதற்கான செயற்திட்டத்தை முஸ்லிம் காங்கிரஸ் வகுக்கும்.

இதன் மூலம் பாராளுமன்றம்,மாகாண சபை,போனஸ் ஆசனம் என மூன்று பிரதேசங்களும் தமக்கான பிரதிநிதியை இலகுவாக பெற்றுக் கொள்ளும்
அம்பாரை மாவட்ட களநிலவரங்களின்படி அக்கரைப்பற்றின் வாக்குகள் அதாஉல்லா தவம் என இரண்டாக பிரிக்கப்படுவதோடு  முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் பொத்துவில்.அட்டாளைச்சேனை பிரதேசங்களும் உள்ளதால் அதாஉல்லா பொத்துவில் தொகுதியை இழக்க வேண்டி வரும்.

சம்மாந்துறை தொகுதியில் முஸ்லிம் காங்கிரசுக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் பலமான போட்டி அமைவதற்கு வாய்ப்புள்ளது.இருந்த போதும் தனிநபர் செல்வாக்கை நம்பியிருக்கும் அமைச்சர் ரிஷாட்டின் யுக்தியை முஸ்லிம் காங்கிரசும் கடைப்பிடிக்கும் என்பதால் முஸ்லிம் காங்கிரஸ் இலகுவாக வெற்றியடையும்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-