News Update :

Wednesday, September 6, 2017

TamilLetter

அதாஉல்லாவுடன் இணையும் அக்கரைப்பற்று ஹனிபா மதனி


அதாஉல்லாவுடன் இணையும் அக்கரைப்பற்று ஹனிபா மதனி
 


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளரும் அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான எஸ்.எல்.எம்.ஹனிபா மதனி அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸில் இணையவுள்ளதாக அறிய முடிகிறது.
 

இரண்டு முறை இதற்கான பேச்சுவார்த்தை இடம் பெற்றுள்ளதாகவும் முதலாவது சந்திப்பில் தான் இணைவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை ஆனால்; எதிர்வரும் மாநகர சபைத் தேர்தலில் மேயர் வேட்பாளராக தேசிய காங்கிரஸ் தன்னை அறிவிக்க வேண்டுமென ஹனிபா மதனியை சந்திக்க வந்தவர்களிடம் கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
 

இதற்கு பதிலளித்த குழு தலைவர் அதாஉல்லாவிடம் இதுபற்றி பேசி விட்டு அவரின் விருப்பத்தை தெரிவிப்பதாக கூறிவிட்டு சென்றனர்.
 

மீண்டும் இரண்டாம் தடவையாக சந்தித்த குழு மேயர் வேட்பாளராக நிறுத்த முடியாது அதற்கு பதிலாக பிரதி மேயர் பதவி வழங்குவதற்கு அதாஉல்லா தயாராகவுள்ளதாக ஹனிபா மதனிக்கு கூறப்பட்டது.
 

இம் முடிவுக்கு சம்மதித்த ஹனிபா மதனி தலைவர் அதாஉல்லாவை சந்திக்கவுள்ளதாகவும்  அதற்கான ஏற்பாடுகளை இக்குழு செய்துள்ளதாகவும் தேசிய காங்கிரஸின் முக்கியஸ்தர் தெரிவித்தார்.

TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-