News Update :

Friday, September 15, 2017

TamilLetter

மாகாண சபை உறுப்பினர் தவம் ஒரு போராளி – தலைவர் ஹக்கீம் பெருமிதம்

மாகாண சபை உறுப்பினர் தவம் ஒரு போராளி – தலைவர் ஹக்கீம் பெருமிதம்


ஆசீக் அகம்மட்

குண்டுச்சட்டிக்குள் குதிரை ஒட்டாமல் நாடு பூராவும் கட்சியின் கொள்கையை தனது பேச்சுத் திறமையால் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகின்றார் மாகாண சபை உறுப்பினர் தவம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அக்கரைப்பற்றில் நேற்று மரம் வளர்ந்த மண் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்தார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா சேகு இஸ்ஸதீனுக்கு நன்றி கூற வேண்டும் சேகு இஸ்ஸதீன் இந்த கட்சியை விட்டு பிரிந்திருக்காவிட்டால் அதாஉல்லா அடையாளம் தெரியாமல் போய்யிருப்பார். அதாஉல்லா தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்வதற்கு நான்தான் கையொப்பமிட்டேன் என்பதை அவர் மறந்துவிட வேண்டாம்.

முஸ்லிம் காங்கிரஸ் தனிநபர்களை அலங்கரிக்கும் கட்சியல்ல இது மக்களின் கட்சி நாடு தழுவிய பிரமாண்டமான இயக்கம் இதை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.

அக்கரைப்பற்றின் அரசியல் தலைமை மாகாண சபை உறுப்பினர் தவம் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஒட்டாமல் தனது சொந்த செலவில் கட்சிக்காக நாடு தழுவிய ரீதீயில் கொள்கை பிரகடணம் செய்து வருகிறார். தலைவர் போக முடியாத சந்தர்ப்பங்களில் அப்பணியை அவர் கச்சிதமாக செய்து வருகிறார் தவம்.  அவர் இக்கட்சியின் சிறந்த போராளி என அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.


















TamilLetter

About TamilLetter -

முக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.
நிருவாகம்-