இழந்ததை பெற்றுத்தந்தாய் அமைச்சர் ஹக்கீமுக்கு அக்கரைப்பற்று விளையாட்டுக் கழகம் நன்றி தெரிவிப்பு
அமைக்கப்படும் புதிய மைதானத்திற்கு நகர திட்டமிடல் அமைச்சின் மூலம் 2 கோடி 3 இலட்சம் ரூபாவும்,விளையாட்டுத்துறை அமைச்சின் மூலம் 4 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டு அதற்கான வேலைத்திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஒரு பிரதேசத்தில் பாரிய முன்னேற்றத்திற்கு விளையாட்டுத்துறை பாரிய பங்களிப்புக்களை வழங்குகின்றது.இளைஞர்களின் தலைமைத்துவ பன்பு தொடக்கம் ஒழுக்க விழுமியங்களை அது கட்டிக் காத்துக் கொண்டிருக்கின்றது.
வளர்ச்சியடையும் நாடுகள் தொடக்கம் வல்லரசு நாடுகள் எல்லாம் விளையாட்டின் மூலம் பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதற்காக கோடான கோடி பணங்களை செலவளித்து மைதானங்களை அமைத்து வருகின்றது.
மைதானங்களின் முக்கியத்துவம் அக்கரைப்பற்றின் முன்னாள் அமைச்சருக்கு புரியாமல் விட்டதன் காரணமாக சுமார் 20 வருடங்களாக அக்கரைப்பற்றின் விளையாட்டுத்துறை அழிந்து கொண்டு வந்தது.
ஏழுவெட்டுவான் மைதானம் இருந்த காலத்தில் தொழில் ரீதியான உத்தியோகத்தர்கள் பலர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர.ஆனால் இன்று 20 வருடங்களை கடந்த நிலையில் ஒரு விளையாட்டு உத்தியோகத்தரை கூட பெற முடியாமல்; எமது பிரதேசம் இருந்து வருகின்றது.
எனவே புதிய மைதானத்தின் மூலம் எமது இளைஞர்களின் கனவு நிறைவேறும் என்பதில் ஐயமில்லை
ஆகவே எமது தேவையை இனம் கண்டு உதவிய முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் அவர்களுக்கும் விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என அக்கரைப்பற்று விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் எம்.ஐ.எம்.இர்பான் தெரிவித்தார்.