இனியொரு முறை வடகொரியா தரப்பில் இருந்து
ஏவுகணை விண்ணில் எழுந்தால், அது போருக்கான தொடக்கப் புள்ளியாக அமைந்து
விடும் என்று ஏற்கனவே அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
அடுத்த 24 மணி நேரத்திற்குள் அணுவாயுத
ஏவுகணை ஒன்றை வட கொரியா பாய்ச்சவிருக்கிறது. நாளை, வடகொரியா ஜனநாயக மக்கள்
குடியரசு உருவான நாள் என்பதால், கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய
உந்துசக்தி அணு ஏவுகணையை வடகொரியா சோதனைச் செய்யவிருக்கிறது என்று
பரபரப்புத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஏவுகணை கூடுதலான தூரம் பாயக்கூடிய
ஆற்றலைக் கொண்டது என்பதால் மிகவும் பதற்றச் சூழலில், அமெரிக்காவுக்கு
எரிச்சலை மூட்ட வேண்டும் என்பதற்காக வடகொரியத் தலைவர் கிம் ஜோங் யுன்
இந்தச் சோதனையை நடத்துகிறார் எனத் தெரிகிறது.
மேலும், இந்தச் சோதனை வழக்கமான ஒன்றல்ல.
மாறாக, முழுமைப் பெற்ற ஒரு போர் ஒத்திகை. வடகொரியா விண்ணில்
பாய்ச்சவிருக்கும் உந்துவிசை ஏவுகணை, வானில் மிக உயரமான தொலைவுக்கு
மேலெழும்பி, பின்னர் பசிபிக் கடலில் போய் விழும்.