உள்ளுராட்சி சபைத்
தேர்தல் டிசம்பரில் – அரசாங்கம் அறிவிப்பு
இவ்ஆண்டு இறுதியில் உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு
குறிப்பிட்டுள்ளார்.தேர்தலைத் தள்ளிப் போடும் எண்ணத்தில் ஒருபோதும்
செயற்படவில்லை. அரசு மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு உண்மைக்குப்
புறம்பானது.
இந்த ஆண்டு இறுதியில் உள்ளூராட்சிச் சபைத் தேர்தல்
நடத்தப்படும் அதேவேளை அடுத்த ஆண்டு நடுப் பகுதியில் மாகாண சபைத் தேர்தலை
நடத்த முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.